fruit லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
fruit லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 நவம்பர், 2012

<> புதினா சூப் <>


புதினா சூப்

புதினா கீரையை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்.  அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு, சீரகம் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அருந்தி வந்தால் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரக கல்லலைப்பு, குழந்தைகளின் மலக்குடலில் உள்ள கீரிப்பூச்சிகிள் எல்லாம் விலகும்.  சாப்பிட்டவுடன் சிறிது சூப் அருந்தி வந்தால் எளிதில் ஜீரணமாகும்.

முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினா சூப்பை இரவு படுக்கைக்கும் முன் குடிப்பது நல்லது.

புதினாவை நிழலில் காயவைத்து பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால் இரவில் நல்ல உறக்கம் வரும்.  உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

<> முருங்கைகீரை சூப் <>


முருங்கைகீரை சூப் 

செய்யும் முறை:

முருங்கைகீரை – 2 கப்
வெண்ணெய் 1 – டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் – 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் – சிறிதளவு

முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.

அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்

<> வாழைத்தண்டு சூப் <>


வாழைத்தண்டு சூப்

தேவையானவை: 

பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – ஒரு கப்  
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – கால் கப் 
மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன் 
சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்  
உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: -

• வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும். 

• அதனை, அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும். 

மருத்துவப் பயன்கள் :-

• கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும். 

மருத்துவப் பயன்கள் : -

வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சூப்பை பருகி வர, எடை குறையும். சிறுநீரகக் கல் கரையும்.

வெட்டி எறியப்படும் வாழைத்தண்டு உடல் உபாதையான சிறுநீரக் கல்லினை நீக்கி உடல் உபாதையை நீக்குகிறது.

இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். நீர் சுருக்கு ஏற்படாமல் பாதுகாக்கும்

இன்றைய இளைய தலைமுறையினர் அருந்தும் குடிநீரின் அளவு குறைந்துவிட்டது. அதற்கு பதிலாக ரசாயனங்கள் நிறைந்த குளிர்பானங்களையும், துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர். இதனால் சிறுநீரக தொடர்பான நோய்களுக்கு ஆளாகின்றனர்.

அதிக மசாலா சேர்க்கப்பட்ட காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம் போன்றவற்றினால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. அதேபோல் சரியான நேரத்தில் சிறுநீரை வெளியேற்றாமல் அடிக்கடி சிறுநீரை அடக்குதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன.

வாழைத்தண்டானது உடலின் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரகக் கல் பிரச்சினை உள்ளவர்கள் தினசரி வாழைத்தண்டு ஜூஸ் பருகலாம். இதனால் சிறுநீரக கல் கரைந்து காணமல் போகும். இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

<> பீட்ரூட் சூப் <>


பீட்ரூட் சூப்

தேவையான பொருட்கள்: -
பீட்ரூட்: அரை கிலோ
வெங்காயம்: 1
எண்ணெய்: 3 மேஜைக் கரண்டி
உருளைக்கிழங்கு: 1
துருவிய எலுமிச்சம் பழத்தோல்: அரைக் கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு: 1 தேக்கரண்டி
உப்பு, மிளகுத்தூள்: தேவைக்கேற்ப 

செய்முறை:-

பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் தோலைச் சீவி துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். எலுமிச்சம் பழத் தோலை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயை சுட வைத்து வெங்காயத்தை இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு, நறுக்கிய பீட்ரூட், உருளைக்கிழங்கு துண்டுகள், துருவிய எலுமிச்சம் பழத்தோல், தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். 15 நிமிடங்கள் வரை இவற்றை கொதிக்க விடவேண்டும்.

காய்கறிகள் வெந்தவுடன் அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து சுமார் 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் புதினா இலை, கிரீம் சேர்த்து சூடாகப் பறிமாற வேண்டும்.

பீட்ரூட் மருத்துவ பயன்கள் : -

பீட்ரூட்டில் இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. 

ஆகவே இதனை சாப்பிடுவதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, குடலியக்கமும் நன்கு இயங்கும்.

பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. 

கர்ப்பினிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாக வளர்ச்சியடையும். பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு. இதனால் ரத்தசோகை ஏற்பட்டு பிரசவகாலத்தில் சிக்கலாகிவிடும். இதனை தடுக்க கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் அதிகம் சேர்த்துக் கொடுக்கவேண்டும்.

இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களை பாதுகாக்கும். 

குழந்தைகளுக்கு கண்நோய் ஏற்படாமல் தடுக்கும். 

கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

<> தக்காளி சூப் <>


தக்காளி சூப்
தேவையான பொருள்கள்:
தக்காளி = 5
வெங்காயம் = 1
மிளகுத்தூள் = தேவையான அளவு
பூண்டு = 6 பல்
வெண்ணெய் = 2 தேக்கரண்டி
சோள மாவு = 1 தேக்கரண்டி
உப்பு = தேவையான அளவு
கொத்தமல்லி இலை = தேவையான அளவு
செய்முறை: -
தக்காளி, வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெய் விட்டு உருகியதும் அதில் பூண்டு போட்டு வதக்கி பிறகு வெங்காயம் சேர்த்து இரண்டும் நன்றாக வதங்கியதும் தக்காளி கலந்து நன்றாக மசியும் வரை வதக்கி பிறகு தேவைக்கேற்ப நீர் விட்டு 15 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்.
பிறகு வடிகட்டிய நீரில் சோள மாவை கலந்து சிறிது நீர் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து பின்னர் மிளகுத்தூள், கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.

மருத்துவ குணங்கள்: -
தக்காளிக்கு அதன் சிவப்பு நிறத்தை கொடுக்கும் லைகொபேன் என்னும் இயற்கை நிறமி தான் நம் சருமம் வயதாவதையும் தாமதப்படுத்துகிறது. 

லைகொபேன் சமைத்த தக்காளியிலும், கெச்சப், சூப், ஜூஸ் ஆகிய தக்காளியை வைத்து செய்யப்படும் பொருட்களிலும் அதிக அளவில் காணப்படுகிறது.

சருமத்தில் சுருக்கம் விழுவதை குறைக்கிறது;
ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோய், நுரையீரல், மார்பகம் மற்றும் ப்ரோஸ்டேட் (Prostate) புற்றுநோய் ஆகியவை வராமல் காப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த சூப் உடலுக்கு வலிமை தரக்கூடியது. இதை வாரத்திற்கு இரண்டு நாட்கள் வைத்து குடித்தால் உடல் வலிமையுடன் பலம் பெறும். 
இந்த தக்காளி சூப் விரைவாக ஜீரணமாக கூடியது.
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்  ஃபாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், ஃபாஸ்ப்போரிக் அமிலம் ஆகியவை தக்காளிப் பழத்தில் இருக்கின்றன. 

தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, சிறிது கால்சியம் ஆகியவை உள்ளன. மேலும் வைட்டமின் C, வைட்டமின் B மற்றும் வைட்டமின்  D ஆகியவை காணப்படுகிறது.

இதனால் உடல் பலவீனம், சோம்பல் ஆகியவற்றை நீக்கும். 

எலும்புகள் மற்றும் பற்களுக்கு பலத்தை தரும். இதய  சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம். 

கபம், சளியை வெளியேற்றும். மலச்சிக்கலை குறைத்து ஜீரண சக்தியை அளிக்கும்.
வெங்காயத்தில் கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது கூறுகள் அதிகம் உள்ளது. இதனால் ஜலதோச‌ம், ஆஸ்துமா, சுவாச பிரச்சனைகள் மற்றும் இருமல் போன்ற நோய்கள் குறைகிறது.
சரும வல்லுநர் ப்ரொபசர் திரு பிர்ச்-மாசின் கூறுகிறார்: “தக்காளி சாப்பிடுவதால் கூடுதலான சருமப் பாதுகாப்பு கிடைக்கிறது”. தக்காளி நமது சருமத்தில் உள்ள மைட்டோகாண்ட்ரியல் டி என் ஏ-வைப் பாதுகாக்கிறது. இந்த டி என் ஏ தான் நமது சருமம் வயதாவதற்கு காரணம் என்று நம்பப் படுகிறது. தக்காளியின் இந்தப் பாதுகாப்பு சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதையும் தாமதப் படுத்துகிறது.