வெந்தயக் கீரை சூப்
சர்க்கரை நோயை விரட்டி அடிக்கும் சூப் இது!
தேவையானவை: வெந்தயக் கீரை - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, சோள மாவு - ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல், வெண்ணெய் - சிறிதளவு, காய்ச்சிய பால் - அரை டம்ளர், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: -
வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் சிறிது வெண்ணெயை விட்டு வெங்காயம், தக்காளியை நன்றாக வதக்கவும். பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கும்போது வெந்தயக் கீரை மற்றும் பூண்டினை சேர்த்து, மேலும் கொதிக்கவிடவும். காய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து இதில் சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடவும். இந்த சூப்பில் தேவையான உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.
இந்த 'வெந்தயக் கீரை சூப்’ சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான உணவு மட்டுமல்ல... கண்கண்ட மருந்துமாகும். காலை உணவுடன் சூப் அருந்தும் பலருக்கும் 'வெந்தயக் கீரை சூப்’ மிகவும் ஏற்றது.
... வெந்தயக் கீரை சூப்: சிறிதளவு சோளத்தை (ஃப்ரெஷ் கார்ன்) அரைத்து சேர்த்தால்... மணமும், ருசியும் கூடும்.
இந்த சூப்பின் நன்மைகள்:-
இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும்!
சர்க்கரை நோயை விரட்டி அடிக்கும்.
வாயுக்கோளாறு, வயிற்று உப்புசம், வயிற்றுப்
போக்கை நிறுத்தவும் உதவும்
உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் உண்டு.
குடற் புண்ணை ஆற்றும் வல்லமை உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக