ஞாயிறு, 11 நவம்பர், 2012

<> பரங்கிக்காய் சூப் <>


பரங்கிக்காய் சூப்


தேவையானவை:

பரங்கிக்காய் - ஒரு துண்டு
வெங்காயம் - 1
தக்காளி - 1
பால் - அரை கப்  
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு  
பூண்டு - 2 பல்  
எண்ணெய் - 2 டீஸ்பூன்  
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை:

• பரங்கிக்காயின் தோலை சீவி மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.

• வெங்காயம் பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்கவும்.

• குக்கரில் எண்ணெய் விட்டு, பூண்டு, தக்காளி, வெங்காயம், பரங்கிக்காயை சேர்த்து வதக்கவும்.

• 10 நிமிடம் வதங்கியதும் இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து மூடி போட்டு 2 அல்லது 3 விசில் வந்ததும் இறக்கவும்.

• ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

• அரைத்த சூப்பை மீண்டும் அடுப்பில் கொதிக்க வைத்து இறக்கி, பால், மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

பரங்கிக்காயின்  மருத்துவக் குணங்கள்: -
பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு. குளிர்ச்சி சுபாவம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போகும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும். இது வீரியபுஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது. மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக