சத்தான... இஞ்சி சூப்
தற்போது பருவநிலை அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கிறது. இதனால் உடலால் அந்த பருவநிலைக்கு ஈடு கொடுக்க முடியாமல், சளி, இருமல், ஜலதோஷம் போன்றவை வந்துவிடுகிறது. சிலருக்கு அதிகமாக உணவு சாப்பிட்டதால் சரியாக செரிமானம் நடக்காமல், வயிறு உப்புசத்துடன் இருக்கும். இத்தகைய அனைத்து பிரச்சனைக்கும் ஒரு வழி என்னவென்றால் அது இஞ்சி சூப் சாப்பிடுவது தான். இப்போது இந்த இஞ்சி சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:-
இஞ்சி விழுது - 5 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
தேன் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி விழுதை போட்டு, நன்கு 4-5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதோடு தேன், எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
* இப்போது சத்தான இஞ்சி சூப் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
இஞ்ஜியின் பயன்கள்:-
வாயு சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் அஜீரணக் கோளாறுகளுக்கும் இஞ்சி ஒரு நல்ல நிவாரணி. வயிற்றுவலி, வாந்தி, பித்தம் மற்றும் வயிற்றில் ஏற்படும் பல தொந்தரவுகளையும் இஞ்சி நிவர்த்தி செய்யும். சாப்பிட்ட பின்பு சிறிது இஞ்சியைச் சாப்பிட உமிழ்நீரின் அளவை அதிகப்படுத்தி வயிற்று உபாதைகளைச் சரிசெய்கிறது.
பித்தத்தினால் ஏற்படும் வாந்தி, மசக்கையினால் ஏற்படும் வாந்தி, மஞ்சட்காமாலை, மூலம், மாமிச உணவை அதிகமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் கோளாறுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பொருட்களைச் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவற்றைச் சரி செய்யும்.
இருமலினால் கஷ்டப்படுபவர்கள் இஞ்சிச் சாறும் தேனும் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை சளியில் இருந்து விடுபடும் வரை சாப்பிட வேண்டும். இஞ்சியைச் சிறிது சிறிதாக வெட்டி தண்ணீரில் இட்டு சிறிது நேரம் கொதித்தவுடன் வடிகட்டி சிறிது சர்க்கரையுடன் சூடாக பருக மூக்கில் நீர் வடியும் பிரச்சினை சரியாகும். சளியினால் ஏற்படும் காய்ச்சலுக்கு மருந்துகளுடன் இஞ்சி டீ சாப்பிட மனதிற்குப் புத்துணர்வு கிடைக்கும்.
இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கிடைக்கும் கஷாயத்துடன் அரை ஸ்பூன் இஞ்சிச்சாறும் சிறிது தேனும் கலந்து பருக நுரையீரல் போன்றவற்றில் அடைத்துக் கொண்டிருக்கும் சளி தானாகவே வெளியேறிவிடும். வயிற்றில் புண் இருப்பவர்களுக்கு இந்த கஷாயத்தைக் கொடுக்கக் கூடாது. சளியினால் தலைவலி ஏற்பட்டால் சுக்கை சிறிது நீர் விட்டு உறைத்து வலி இருக்கும் இடங்களில் லேசாகத் தடவவேண்டும்.
அரை ஸ்பூன் இஞ்சிச் சாற்றை அரை வேக்காடு முட்டை மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து தினம் ஒரு முறை இரண்டு மாதங்கள் சாப்பிட உணர்வு நரம்புகளைப் புதுப்பித்து ஆண்களின் மலட்டுத் தன்மையைப் போக்குவதுடன் உடலிற்கு புதுப்பலத்தையும் அளிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக