திங்கள், 12 நவம்பர், 2012

<>கேழ்வரகு இட்லி <>


கேழ்வரகு இட்லி 

தேவையானவை...... 

கேழ்வரகு மாவு -  100 கிராம் 
இட்லி மாவு – ஒரு குழிகரண்டி 
உளுந்து – 25 கிராம் 
வெந்தயம் – கால் தேக்கரண்டி 
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை 
உப்பு – தேவைக்கு 

செய்முறை..... 

• ராகி மாவை லேசாக வறுத்து கொள்ளவும். 

• உளுந்தையும் வெந்தயத்தையும் 1 மணி நேரம் ஊறவைத்து மை போல் அரைத்து கொள்ளவும். 

• அரைத்த உளுந்துடன் இட்லி மாவு, ராகிமாவையும் சேர்த்து தேவைக்கு தண்ணீர் ஊற்றி (இட்லிமாவு பத்த்தில்)கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும். 

• புளித்த மாவில் இட்லி சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி இட்லிகளாக வார்க்கவும். 

• டயட்டுக்கு ஏற்ற சுவையான டிபன். தக்காளி பூண்டு சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். சர்க்கரை வியாதிகார்களுக்கு ஏற்ற டிபன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக