ஞாயிறு, 11 நவம்பர், 2012

<> வாழைத்தண்டு சூப் <>


வாழைத்தண்டு சூப்

தேவையானவை: 

பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – ஒரு கப்  
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – கால் கப் 
மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன் 
சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்  
உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: -

• வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும். 

• அதனை, அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும். 

மருத்துவப் பயன்கள் :-

• கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும். 

மருத்துவப் பயன்கள் : -

வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சூப்பை பருகி வர, எடை குறையும். சிறுநீரகக் கல் கரையும்.

வெட்டி எறியப்படும் வாழைத்தண்டு உடல் உபாதையான சிறுநீரக் கல்லினை நீக்கி உடல் உபாதையை நீக்குகிறது.

இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். நீர் சுருக்கு ஏற்படாமல் பாதுகாக்கும்

இன்றைய இளைய தலைமுறையினர் அருந்தும் குடிநீரின் அளவு குறைந்துவிட்டது. அதற்கு பதிலாக ரசாயனங்கள் நிறைந்த குளிர்பானங்களையும், துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர். இதனால் சிறுநீரக தொடர்பான நோய்களுக்கு ஆளாகின்றனர்.

அதிக மசாலா சேர்க்கப்பட்ட காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம் போன்றவற்றினால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. அதேபோல் சரியான நேரத்தில் சிறுநீரை வெளியேற்றாமல் அடிக்கடி சிறுநீரை அடக்குதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன.

வாழைத்தண்டானது உடலின் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரகக் கல் பிரச்சினை உள்ளவர்கள் தினசரி வாழைத்தண்டு ஜூஸ் பருகலாம். இதனால் சிறுநீரக கல் கரைந்து காணமல் போகும். இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக