ஞாயிறு, 11 நவம்பர், 2012

<> பீட்ரூட் சூப் <>


பீட்ரூட் சூப்

தேவையான பொருட்கள்: -
பீட்ரூட்: அரை கிலோ
வெங்காயம்: 1
எண்ணெய்: 3 மேஜைக் கரண்டி
உருளைக்கிழங்கு: 1
துருவிய எலுமிச்சம் பழத்தோல்: அரைக் கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு: 1 தேக்கரண்டி
உப்பு, மிளகுத்தூள்: தேவைக்கேற்ப 

செய்முறை:-

பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் தோலைச் சீவி துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். எலுமிச்சம் பழத் தோலை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயை சுட வைத்து வெங்காயத்தை இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு, நறுக்கிய பீட்ரூட், உருளைக்கிழங்கு துண்டுகள், துருவிய எலுமிச்சம் பழத்தோல், தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். 15 நிமிடங்கள் வரை இவற்றை கொதிக்க விடவேண்டும்.

காய்கறிகள் வெந்தவுடன் அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து சுமார் 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் புதினா இலை, கிரீம் சேர்த்து சூடாகப் பறிமாற வேண்டும்.

பீட்ரூட் மருத்துவ பயன்கள் : -

பீட்ரூட்டில் இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. 

ஆகவே இதனை சாப்பிடுவதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, குடலியக்கமும் நன்கு இயங்கும்.

பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. 

கர்ப்பினிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாக வளர்ச்சியடையும். பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு. இதனால் ரத்தசோகை ஏற்பட்டு பிரசவகாலத்தில் சிக்கலாகிவிடும். இதனை தடுக்க கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் அதிகம் சேர்த்துக் கொடுக்கவேண்டும்.

இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களை பாதுகாக்கும். 

குழந்தைகளுக்கு கண்நோய் ஏற்படாமல் தடுக்கும். 

கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக