பேரிச்சம் பழ சூப்
தேவையான பொருள்கள்:
பேரிச்சம் பழம் - 5
வெள்ளரிக்காய் - 1
கேரட் - 2
தேங்காய் - 2
கீற்று புதினா இலை - 5
மிளகு - 2
பச்சை மிளகாய் -1
மல்லி இலை - சிறிது
செய்முறை:
* மல்லி இலை தவிர மற்ற அனைத்து பொருள்களையும் நன்கு கழுவி நறுக்கி மிக்சியில் போட்டு அரைத்து சாறு பிழிந்து தேவையான தண்ணீர் கலந்து கொதிக்க விடவும். கடைசியில் மல்லி இலை தூவி இறக்கவும்.
பேரீச்சம் பழத்தின் நன்மைகள் :-
இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும்.
பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தி இரத்தத்தைச் விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.
* காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரிச்சம் பழம் அதிகம் துணை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது
* வளரும் குழந்தைகளுக்கு பேரிச்சம் பழம் கொடுத்து வந்தால் அது அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை.
பேரீச்சம்பழத்தில் அதிக அளவில் மெக்னீசியம் காணப்படுகின்றது. (600மி.கி. 1 கிலோ பேரீச்சம்பழத்தில்) இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது பேரீச்சம்பழத்தை ஒரு நுண்ணூட்டச்சத்து சுரங்கம் என்றே அழைக்கலாம். ஏனெனில் அதில் எண்ணற்ற நுண்ணூட்டச்சத்துக்களும் தாதுப்பொருட்களும் உள்ளது.
எண்ணற்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பேரீச்சம்பழம்இ உடனடி சக்தி தரும் ஊட்ட உணவு ஆகும். தொடர்ந்து பேரீச்சம் பழம் உண்பவர்களுக்கு வயிறுஇ குடல் நோய்கள் குணமடையும். வயிற்றில் உள்ள தூண் கிருமிகள் வெளியேறும். அதிக நார்ச்சத்து கொண்டதால் மலத்தை இளக்கி மலச்சிக்கலை போக்கிடும். ஆண்மை சக்தியையும் பெண்மை சக்தியையும் பெருக்கிடும்.
பெண்களுக்கு தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்திட உதவும். இரத்த சோகையை தவிர்த்திடும். நன்கு பழுத்த உலர்ந்த பழங்களை சுத்தம் செய்து விதை நீக்கி உண்பது நல்லது. பழங்களை பாலில் கொதிக்க வைத்து மசித்து உண்ணலாம். பழங்களை இரண்டாக நறுக்கி தேனில் ஊறப்போட்டு வைத்துக் கொண்டு தினசரி இரவு உண்ணலாம். பிற உணவுகளில் இனிப்பு சுவைக்காக பேரீச்சம் பழங்களை அரைத்து கலந்து உபயோகிக்கலாம். பேரீச்சம்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வர எடை மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.
மலச்சிக்கல் நீங்கிட இரவு 5 பழங்களை நன்கு கழுவி தண்ணீரில் ஊற வைத்து அதிகாலையில் அதனை மசித்து பழரசமாக பருகலாம். குழந்தைகளுக்கு பேதி நீங்கிட ஒரு பேரீச்சம்பழத்தை ஒரு தேக்கரண்டி தேனில் சேர்த்து அரைத்து கொடுக்கலாம்.
பேரீச்சம்பழங்களை பெரும்பாலும் திறந்த வெளிகளில் உலர வைப்பதால் அவற்றில் அதிகளவு தூசி படிந்திருக்கும். எனவே அவற்றை நன்கு சுத்தம் செய்து உண்பது மிக அவசியம். பேரீச்சம்பழங்கள் மிக அதிக சர்க்கரை கொண்டவை எனவேஇ அவற்றை சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு உடையவர்கள் உண்பதை அவசியம் தவிர்த்திட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக